25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ராஜபாளையம் ஏ. கே.டி தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல் முன்னாள் மாணவர் சங்கமம் நிகழ்ச்சி 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ராஜபாளையம் ஏ. கே.டி தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல் முன்னாள் மாணவர் சங்கமம் நிகழ்ச்சி 

ராஜபாளையம் நகரில்1888 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 136 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆங்கிலோ வெர்னாகுலர் பள்ளியில் "டி  குழுமம்24" என்ற பெயரில் ராஜபாளையம்ஏ. கே.டி தர்மராஜா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முதல் முன்னாள் மாணவர் சங்கமம் நிகழ்ச்சி பள்ளி தாளாளர் கிருஷ்ணராஜு தலைமையில் தலைமை ஆசிரியர் சரவணனின் முன்னிலையில் நடைபெற்றது.இப்பள்ளி மாணவர் செல்வராகேஷ் குமார் வரவேற்புரை ஆற்ற,மாணவர் ஷேக் முகமது ஒளியுல்லா நன்றியுரை வழங்கினார்.விழாவில் முன்னாள் மாணவர்கள் மற்றும் முன்னாள்  ஆசிரியர்கள் உட்பட சுமார் 855பேர் பங்கேற்றனர்.

இப்பள்ளியின் முன்னாள் மாணவர் அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் சீனிவாசன் சிறப்புரையாற்றி பள்ளியின் வளர்ச்சிக்கு ரூபாய் 5 லட்சம் நன்கொடை வழங்கினார்கள் .முன்னாள் மாணவர்  சங்கர சுப்ரமணியம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கிட ரூபாய்  2.5 லட்சம் செலவில் ஆர். ஓ அமைப்பு ஏற்படுத்த நன்கொடை வழங்கினார்கள்.முதன்முறையாக முன்னாள் மாணவர் சங்கத்திற்கு நிர்வாகி தேர்வு செய்யப்பட்டனர்.25 வயது முதல்82வயது வரை உள்ள முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் பழைய நினைவுகளை பகிர்த்து முன்னாள் ஆசிரியர்களை நெகிழ்வுடன் கெளரவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் மாணவர்க ளுக்கும் முன்னாள் ஆசிரியர் களுக்கும் விளையாட்டும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்ளுக்கு பரிசு வழங்கப்பட்டன.ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன், காலை முதல் மாலை வரை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News